Home தென்னிலங்கைச் செய்திகள் அடுத்த மாதம் இரத்தாகும் பயங்கரவாத தடைச் சட்டம் – நாடாளுமன்றில் அரசு அறிவிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

அடுத்த மாதம் இரத்தாகும் பயங்கரவாத தடைச் சட்டம் – நாடாளுமன்றில் அரசு அறிவிப்பு!

Share
Share

பயங்கரவாதத் தடைச் சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாத முற்பகுதிக்குள் இரத்துச் செய்யப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றுகையிலே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தலைமையிலான குழுவின் அறிக்கை அடுத்த மாத தொடக்கத்தில் கிடைக்கும்.

அதற்கமைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதற்கான வர்த்தமானி அடுத்த மாத ஆரம்பத்தில் வெளியிடப்படும்.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான புதிய சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக இயற்றப்படும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கிளிநொச்சியில் அதிகாலை விபத்து! இருவர் பலி!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 பிரதான வீதியின் பரந்தன் பகுதியில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற...

ராஜிதவுக்கு விளக்கமறியல்!

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த மற்றொரு வழக்கு தொடர்பாக இன்று கொழும்பு...

மயிலிட்டியில் நிற்கும் 62 இந்தியப் படகுகளும் அள்ளிச் சென்று அச்சுவேலியில் கொட்டப்படும்!

அத்துமீறி இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் அரசுடைமையாக்கப்பட்டு மயிலிட்டித் துறைமுகத்தில் தரித்து நிற்கும் 62 இந்தியப்...

போக்குவரத்து சபை சாரதிகளுக்கு எச்சரிக்கை!

அனைத்து போக்குவரத்து சபை சாரதிகளும் பணிக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு செய்யத் தவறின் அவர்களை இடைநிறுத்த...