வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற இளம் யுவதி ஒருவரை காணவில்லை என நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, தம்பனைபுளியங்குளம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் சர்மிளா (வயது 22) என்ற இளம் யுவதியே காணாமல் போனவராவார்.
தொடர் தலைவலி காரணமாக மருந்து எடுப்பதற்காக பேருந்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வவுனியா வைத்தியசாலைக்கு சென்று வைத்தியசாலையில் மருந்து எடுத்துள்ளார்.
எனினும், குறித்த யுவதி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரை வீடு வந்து சேரவில்லை. உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தேடிய பெற்றோர், மகள் தொடர்பில் தகவல்கள் எதுவும் தெரியாத நிலையில், நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாடு தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment