இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதிக்குள் இலங்கையில் 82 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களின் போது 44 பேர் உயிரிழந்துள்ளதுடன் 48 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அதிகளவான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளன என்றும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment