Home தாயகச் செய்திகள் சித்துபாத்தி ஸ்கான் ஆய்வு அறிக்கை இன்று நீதிமன்றுக்கு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சித்துபாத்தி ஸ்கான் ஆய்வு அறிக்கை இன்று நீதிமன்றுக்கு!

Share
Share

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஸ்கான் ஆய்வு தொடர்பான அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 

மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியின், இரண்டாவது அமர்வில் மீட்கப்பட்ட தடயப் பொருட்கள் மற்றும் எலும்புக்கூட்டுத் தொகுதிகள் தொடர்பான அறிக்கையும் இன்றைய தினம் மன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுப் பணிக்கான திகதியை நீதிமன்றத்திடம் இன்று பெற்றுக் கொள்ளவுள்ளதாகப் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன், தெரிவித்தார். 

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளை 45 நாட்கள் நடத்துவதற்கு முன்னதாக நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. 

அதற்கமைய மூன்று அமர்வுகளாக முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்ட அகழ்வுப் பணிகளில் இரண்டு அமர்வுகள் நிறைவடைந்துள்ளன. 

இரண்டாம் கட்டத்தின் இரண்டாவது அமர்வு அகழ்வுப் பணிகளின் நிறைவில் 140 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. 

அவற்றில் சிறார்களின் என்புக்கூட்டுத் தொகுதிகளும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் சிறார்களின் ஆடைகள், பொம்மைகள், காலணிகள், புத்தகப்பை, பால் போத்தல்கள் உள்ளிட்ட பல தடயப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இந்தியக் கடற்பரப்பில் இலங்கையர் இருவர் கைது – யாழ். மாவட்டப் பதிவு இலக்கம் கொண்ட படகும் சிக்கியது!

இந்தியக் கடற்பகுதியில் நின்ற படகில் இருந்த இரண்டு இலங்கையரை இந்தியப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம்...

எம்.வி.சன்சியின் 15 ஆண்டு நிறைவை ஒட்டி பொது அறிவுப் போட்டி!

எம்.வி.சன்சி 15 ஆவது வருட நிறைவினையொட்டி நடாத்தப்படும் பொது அறிவுப்போட்டிக்கான பதிவுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கனடாவில்...

மன்னாரில் காற்றாலை அமைப்பு ஒரு மாதத்துக்கு இடைநிறுத்தம்!அதன் பின்னர் அது நடக்குமாம்!

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்தி வைப்பதுடன்,...

மட்டக்களப்பில் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

செம்மணி, முல்லைத்தீவு மற்றும் சட்டவிரோத சமூகச்  செயற்பாடுகளுக்கான நீதி கோரும் கவனவீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை...