Home தென்னிலங்கைச் செய்திகள் அநுரவைச் சந்தித்த ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

அநுரவைச் சந்தித்த ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்!

Share
Share

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

தனது பதவிக்காலம் நிறைவடைந்து இலங்கையை விட்டு வெளியேறும் போல் ஸ்டீபன்ஸின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி இதன்போது வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போதும் அதற்குப் பின்னரும் ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் வழங்கிய ஆதரவை ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.

மேலும், கடந்த காலங்களில் ஆஸ்திரேலிய இராஜதந்திரிகள் பலர் இந்நாட்டுக்கு விஜயம் செய்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, ஆஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் உயர்ஸ்தானிகர் வழங்கிய ஆதரவைப் பாராட்டினார்.

இந்நாட்டு சுற்றுலா, கல்வி மற்றும் தொழிற்கல்வி போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு ஆஸ்திரேலியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்று ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

துப்பாக்கிச் சூடுகளால் இவ்வருடம் இதுவரை 44 பேர் மரணம்!

இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதிக்குள் இலங்கையில் 82 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸார்...

விமலை இன்று3 மணிநேரம் துருவிய சி.ஐ.டி.!

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர்...

முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலிற்கான தேவையில்லை – அரசாங்கம்!

முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலிற்கான தேவையில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால மோர்னிங்கிற்கு...