Home தென்னிலங்கைச் செய்திகள் கூட்டுப் பொறுப்பைப் பராமரிக்கத் தவறியுள்ளது அமைச்சரவை – தலதா அத்துகோரல தெரிவிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

கூட்டுப் பொறுப்பைப் பராமரிக்கத் தவறியுள்ளது அமைச்சரவை – தலதா அத்துகோரல தெரிவிப்பு!

Share
Share

சுப்ரீம்செட் திட்டத்தின் முதலீடு குறித்து மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டதன் மூலம் அமைச்சரவை தமது கூட்டுப் பொறுப்பைப் பராமரிக்கத் தவறியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பின் உறுப்புரை 43(1) இன் படி அமைச்சரவை, கூட்டுப் பொறுப்பைப் பராமரிக்கக் கடமைப்பட்டுள்ளது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக பிரதமர் ஹரிணி அமரசூரிய ஒரு பதிலை வழங்கியதை அவதானிக்க முடிந்தது.

இருப்பினும், அமைச்சர் வசந்த சமரசிங்க பின்னர் முற்றிலும் மாறுபட்டதொரு கருத்தை வெளியிட்டார்.

இந்த விடயத்தில் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு மீறப்பட்டுள்ளது.” – எனத் தெரிவித்துள்ளார். 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...