Home தாயகச் செய்திகள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவதை எதிர்த்து மனுத் தாக்கல்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவதை எதிர்த்து மனுத் தாக்கல்!

Share
Share

கடந்த 07 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளின்
சிறப்புரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி நேற்று
உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேராவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனுபவித்து வரும்
சிறப்புச் சலுகைகளை இரத்து செய்வதற்காக, 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் எண் ஜனாதிபதி
உரிமைச் சட்டத்தை இரத்து செய்வதற்கான தொடர்புடைய சட்டமூலம் அண்மையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள் இரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட மூலத்தின்படி, முன்னாள் ஜனாதிபதி அல்லது மனைவிக்கு வழங்கப்படும் எந்தவொரு வீடு, மாதாந்த கொடுப்பனவும், மாதாந்த செயலக கொடுப்பனவு, போக்குவரத்து, பிற வசதிகள் மற்றும் மாதாந்த ஓய்வூதியமும் இரத்து செய்யப்படவுள்ளன.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்து செய்யும் வகையில், ஜனாதிபதியின் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி நேற்று உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அநுரவைச் சந்தித்த ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல்...

மட்டக்களப்பில் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

செம்மணி, முல்லைத்தீவு மற்றும் சட்டவிரோத சமூகச்  செயற்பாடுகளுக்கான நீதி கோரும் கவனவீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை...

இந்த அருமையான வாய்ப்பை அரசு கோட்டை விடக் கூடாது! ஐ.நா. மனித உரிமைகள் ஆணையளார் இலங்கையிடம் அழுத்தமான கோரிக்கை!

சர்வதேச குற்றங்கள் உட்பட கடந்த காலங்களில் செய்யப்பட்ட கடுமையான மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குத் தண்டனை விலக்களிப்பு...

புலம்பெயர் ஈழத்தமிழர்களைச் சுமந்து சென்ற MV Sun Sea கப்பல் கனடாவை அடைந்து 15 ஆண்டுகள் நிறைவு!

தாயகத்தில் நடைபெற்ற போருக்குப் பின்னர் ஏதிலாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் 492 பேரை கடல்வழியாக சுமந்து சென்ற...