யானையின் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதனா மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு – ஒட்டுசுட்
டான் – கருவேலன்கண்டல் மானுருவி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்தச்
சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் சுந்தரம் சிவதாஸ் (வயது 51) என்பவரே படுகாயமடைந்தார்.
சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தவரை யானை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
அவர், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, இந்தப் பகுதியில் அடிக்கடி யானை தொல்லை இருப்பதாகவும்
மின்வேலி அமைத்துத் தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
Leave a comment