Home தாயகச் செய்திகள் மீண்டும் தமிழரசு வசமானது ஆரையம்பதி பிரதேச சபை – புதிய தவிசாளராக செந்தில்குமார் தெரிவு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மீண்டும் தமிழரசு வசமானது ஆரையம்பதி பிரதேச சபை – புதிய தவிசாளராக செந்தில்குமார் தெரிவு!

Share
Share

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று – ஆரையம்பதி பிரதேச சபை மீண்டும் இலங்கைத் தமிழரசுக் கட்சி வசமானது. புதிய தவிசாளராக அந்தக் கட்சியைச் சேர்ந்த காத்தலிங்கம் செந்தில்குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோர் பிரசன்னத்தில் சபை மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது புதிய தவிசாளருக்கான முன்மொழிவை உள்ளூராட்சி ஆணையாளர் கோரினார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆரையம்பதி பிரதேச சபையின் உப தவிசாளர் காத்தலிங்கம் செந்தில்குமார் தவிசாளர் பதவிக்கு முன்மொழியப்பட்டார். தவிசாளருக்கான வேறு தெரிவுகள் இன்மையால் ஆரையம்பதி பிரதேச சபையின் தவிசாளராக கா.செந்தில்குமார் ஏகமனதாகத் தெரிவு செய்ப்பட்டார்.

பிரதேச சபையின் உப தவிசாளருக்கான பதவியானது தற்போது வறிதாக்கப்பட்டுள்ளமையால், மீண்டும் குறித்த பதவிக்கான வெற்றிடம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு தெரிவு செய்யப்படும் என்று கிழக்கு உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

முன்னர் தெரிவு செய்யப்பட்ட தவிசாளர் த.மாணிக்கராஜா அண்மையில் காலமாகியதன் காரணமாக இந்தப் புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் புதிய தவிசாளர் தெரிவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்யின் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யானைகள் இறப்பு வீதத்தில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு வீதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு மன்றம் தெரிவிக்கிறது....

நாட்டின் பொருளாதார மீட்சி எதிர்பார்த்ததைவிட வேகமாக முன்னேற்றம் – மத்திய வங்கி ஆளுநர்!

நாட்டின் பொருளாதார மீட்சி ஆரம்பத்தில் எதிர்பார்த்ததைவிட வேகமாக முன்னேறி வருகிறது. அடுத்த 3 ஆண்டுக்குள் நாடு...

அரசுக்குள் குழப்பம் என்று கூறி வதந்தியைப் பரப்பாதீர்கள் – பிரதமர்!

“தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று...

துப்பாக்கிச் சூடுகளால் இவ்வருடம் இதுவரை 44 பேர் மரணம்!

இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதிக்குள் இலங்கையில் 82 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸார்...