சுயாதீன ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு அழைத்துள்ளது.
சுயாதீன ஊடகவியலாளர் குமணன் காணாமல்போனோரின் உறவுகளின் போராட்டங்கள், நில அபகரிப்பு மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி போன்ற செய்திகளைத் தொடர்ச்சியாகக் களத்தில் நின்று வெளியிட்டு வருபவர். இந்நிலையில், அவரைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைத்துள்ளது.
பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் குமணனுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையில், வாக்குமூலமொன்றைப் பதிவு செய்வதற்காக ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி காலை 10 மணிக்கு முல்லைத்தீவு, அளம்பில் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a comment