Home தாயகச் செய்திகள் அநுர – தமிழ் எம்.பிக்கள்  இன்று அவசர சந்திப்பு
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

அநுர – தமிழ் எம்.பிக்கள்  இன்று அவசர சந்திப்பு

Share
Share

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின் பெயரில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா இன்று அவசரமாகச் சந்திக்கின்றார்.

மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படும் காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பில் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் ஒப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதம் தொடர்பில் ஆராயவே இந்த அவசர சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக்  கட்டடத் தொகுதியில் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ள இந்த அவசர சந்திப்புக்குக்  கடிதத்தில் ஒப்பமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கடித்ததில் ஒப்பமிடாத  வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சந்திப்புக்கு மன்னார் காற்றாலையுடன் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ரத்ன தேரரைக் காணவில்லையாம்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் நிலையில்,...

புலமைப்பரிசில் பரீட்சை இன்று!

ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை (10) நாடளாவிய ரீதியில் 2587...

“மாகாண சபை முறைமையும் அதிகாரப் பகிர்வும்”எனும் தலைப்பில் யாழ்ப்பாணத்தில் கருத்தரங்கு!

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் மாகாண சபை முறைமையும் அதிகாரப் பகிர்வும் எனும்...

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற அம்பாறை – உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா...