Home தென்னிலங்கைச் செய்திகள் இலங்கையை வந்தடைந்தார் ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இலங்கையை வந்தடைந்தார் ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம்!

Share
Share

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் நேற்று புதன்கிழமை மாலை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்தார்.

சமந்தா ஜோய் மோஸ்டின் உள்ளிட்ட குழுவினரை வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரை ச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

இந்தச் சந்திப்பில் ஆஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளின் பரஸ்பர பயன்தரும் தற்போதுள்ள ஒத்துழைப்புத் துறைகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்படும்.

சமந்தா ஜோய் மோஸ்டின் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் பண்டாரகம, மிரிஸ்ஸ மற்றும் வெலிகம போன்ற பகுதிகளில் ஆஸ்திரேலியாவின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் பல திட்டங்களைக் கண்காணிக்கவும் உள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ரத்ன தேரரைக் காணவில்லையாம்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் நிலையில்,...

புலமைப்பரிசில் பரீட்சை இன்று!

ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை (10) நாடளாவிய ரீதியில் 2587...

ஆட்சியைப் பிடிப்பதற்குரிய வேலைத்திட்டம் ஆரம்பமாம் – மொட்டுக் கட்சி கூறுகின்றது

ஆட்சியைப் பிடிப்பதற்குரிய வேலைத்திட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முன்னெடுத்து வருகின்றது என்று முன்னாள் இராஜாங்க...

காற்றாலை மின் கோபுரம் அமைத்தல், கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு: மன்னாரில் 7 ஆவது நாளாகவும் தொடர் போராட்டம்!

மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி இரண்டாவது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும்...