Home தென்னிலங்கைச் செய்திகள் அரச ஊழியர்களின் வேதன உயர்வுக்கு நடவடிக்கை!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

அரச ஊழியர்களின் வேதன உயர்வுக்கு நடவடிக்கை!

Share
Share

அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் எனவும், அதனைப் பாதுகாப்பதற்கு அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 41 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது, அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அடுத்த ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில், பௌதீக வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் சிதைந்துபோன அரச சேவையை நவீனமயமாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச சேவையை வலுப்படுத்தும் வகையில், 2027ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களின் வேதன உயர்வுக்காக 11 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அநுர – தமிழ் எம்.பிக்கள்  இன்று அவசர சந்திப்பு

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின் பெயரில் தமிழ் நாடாளுமன்ற...

காலில் செருப்புடன் எலும்புக்கூடு ஒன்று மீட்பு

செம்மணி மனிதப் புதைகுழியில் காலில் செருப்புடன் மனித என்புத் தொகுதி ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி...

இலங்கையை வந்தடைந்தார் ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் நேற்று...