Home தாயகச் செய்திகள் படை விட்டோடிகள் 3,500 பேர் கைது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

படை விட்டோடிகள் 3,500 பேர் கைது!

Share
Share

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500 இற்கும் மேற்பட்ட
ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 22 முதல் ஓகஸ்ட் 03 வரை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில்,
சேவையிலிருந்து தப்பியோடிய முப்படையினர் 3,504 பேர், கைது செய்யப்பட்டதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் இராணுவத்தினர் 2 937 பேர்.

மேலும்,

கடற்படையினர் 289 பேர், விமானப்படையினர் 278 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முப்படைகளில் இருந்து சட்டபூர்வமாக இராஜினாமா செய்யாத படையினர் இராணுவத்தில் சரணடைவதற்காக கடந்த ஆண்டு பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டது.

மேலும் அந்தக் காலகட்டத்தில் சரணடையாதவர்களைக் கைது செய்வதற்கான
நடவடிக்கைகள் பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அநுர – தமிழ் எம்.பிக்கள்  இன்று அவசர சந்திப்பு

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின் பெயரில் தமிழ் நாடாளுமன்ற...

காலில் செருப்புடன் எலும்புக்கூடு ஒன்று மீட்பு

செம்மணி மனிதப் புதைகுழியில் காலில் செருப்புடன் மனித என்புத் தொகுதி ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி...

இலங்கையை வந்தடைந்தார் ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் நேற்று...