ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜாய் மோஸ்டின் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை புதன்கிழமை வருகை தரும் சமந்தா ஜாய் மோஸ்டின் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்து இரு தரப்பு கலந்துரையாடல்களில் அவர் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பண்டாரகம, மிரிஸ்ஸ மற்றும் வெலிகம ஆகிய இடங்களில் உள்ள ஆஸ்திரேலியாவின் ஆதரவுடன் இயங்கும் திட்டங்களையும் அவர் பார்வையிடவுள்ளார்.
அத்துடன், இந்த விஜயம் இலங்கை – ஆஸ்திரேலிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும், இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்காக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டது என்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
Leave a comment