Home தென்னிலங்கைச் செய்திகள் புலிகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தினர் போர்க்குற்றவாளிகளா? – நாமல் எம்.பி. கடும் கொதிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

புலிகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தினர் போர்க்குற்றவாளிகளா? – நாமல் எம்.பி. கடும் கொதிப்பு!

Share
Share

“விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் முதலீட்டாளர்களாகவும், அந்த அமைப்பிடம் இருந்து நாட்டைப்  பாதுகாத்த படையினர் போர்க்குற்றவாளிகளாகவும் பார்க்கப்படும் நிலையே தற்போதைய ஆட்சியின் கீழ் காணப்படுகின்றது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கில் அப்பாவி இளைஞர்களின் கழுத்தில் சயனைட் குப்பிகளைத்  தொங்கவிடுவதற்கு நிதி வழங்கிய தமிழ் டயஸ்போராக்களை மிகப்பெரிய முதலீட்டாளர்களாகக் கருதும் அரசு, போரை முடிவுக்குக்  கொண்டு வந்த படையினரைக் குற்றவாளியாகப் பார்க்கின்றது. முன்னாள் கடற்படைத் தளபதி சிறையில் உள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பை ஊக்குவித்தவர்கள் இன்று முதலீட்டாளர்கள், அந்த அமைப்பிடம் இருந்து நாட்டைப்  பாதுகாத்தவர்கள் போர்க்குற்றவாளிகளாகியுள்ளனர்.

விடுதலைப்புலிகளால் செய்ய முடியாமல்போன கலாசாரச் சீரழிவைத்  தற்போதைய அரசு செய்கின்றது. அதனால்தான் பாடத்திட்டத்தில் இருந்து வரலாற்றுப் பாடத்தைக்கூட நீக்குவதற்கு முற்படுகின்றனர்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

செம்மணிப் புதைகுழி குறித்த விசாரணைக்கு அரசு எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!

“யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளுக்கு அரசு எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை. மாறாக தேவையான...

தேசபந்துவைப் பதவி நீக்குகின்றகடிதத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்!

தேசபந்து தென்னக்கோனைப் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் கடிதத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஒப்புதல்...

மின்சாரம் திருத்தச் சட்டமூலம் சபையில்96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இன்று...

சஷீந்திர ராஜபக்ஷ கைது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார். நுகேகொடையிலுள்ள அவரது வீட்டில் வைத்து கையூட்டல் மற்றும் ஊழல்...