Home தென்னிலங்கைச் செய்திகள் முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்துச் செய்யாதீர் – எஸ்.பி. வலியுறுத்து!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்துச் செய்யாதீர் – எஸ்.பி. வலியுறுத்து!

Share
Share

“முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசால் வழங்கப்படும் மாளிகைகளை மீளப்பெறுவதில் தவறு கிடையாது. ஆனால், முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படக்கூடாது. தற்போது வழங்கப்படும் தொகை அதிகரிக்கப்பட வேண்டும்.” இவ்வாறு அநுர அரசிடம் வலியுறுத்தினார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“உலகில் பலம் பொருந்திய, அபிவிருத்தி அடைந்து வரும் மற்றும் வறுமை நாடுகளில்கூட முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அவர்களின் ஓய்வுகாலத்தில் வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, இலங்கையில் இவற்றை நீக்குவதற்கு முற்படாமல், இந்த நாட்டில் செய்ய வேண்டிய பல விடயங்கள் உள்ளன. அவற்றைச் செய்ய வேண்டும்.

எனினும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசால் வழங்கப்படும் மாளிகைகளை மீளப்பெறுவதில் தவறு கிடையாது. ஆனால், முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியத்தை நீக்க முடியாது. அது அரசமைப்பில் உள்ள விடயம். தற்போது வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்பட வேண்டும். அத்துடன், பணியாள் தொகுதி மற்றும் பாதுகாப்பு என்பன வழங்கப்பட வேண்டும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...