Home தென்னிலங்கைச் செய்திகள் மாகாண சபைத் தேர்தலில் இ.தொ.கா.தனிவழி செல்வதே நல்லது என்கிறார் ஜீவன்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மாகாண சபைத் தேர்தலில் இ.தொ.கா.தனிவழி செல்வதே நல்லது என்கிறார் ஜீவன்!

Share
Share

“மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் அதில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். எனினும், கட்சியே இறுதி முடிவை எடுக்கும்.” – இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொழும்பு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்வில் கலந்துகொண்ட ஜீவன் தொண்டமான் எம்.பியிடம் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்புகளுடனும் பேச்சு நடத்தினோம். எனினும், எதிர்க்கட்சியிடம் ஒற்றுமை இல்லை. ஒற்றுமை இல்லாத அமைப்பை நம்பி இருந்தால் வேலை செய்வதற்குரிய வாய்ப்பு இல்லாமல் போகும்.

உள்ளூராட்சி சபை என்பது நிர்வாக சம்பந்தப்பட்ட விடயம். அந்த நிர்வாகம் முறையாக நடந்தால்தான் மக்களுக்குரிய சேவை முறையாகச் சென்றடையும்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கட்சியே இறுதி முடிவை எடுக்கும். எனினும், நாம் தனித்துப் போட்டியிட்டால் அது நமக்குப் பயனாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

ஆளும் கட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எதிர்க்கட்சி மீதும் நம்பிக்கை இல்லை. எனவே, நாம் எமது வழியில் பயணிப்பது சிறந்தது. எனினும், கட்சியே இறுதி முடிவை எடுக்கும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...