உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் வயோதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை, அக்போபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சீனிபுரம் பகுதியில் மேற்படி வயோதிபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்போபுரம் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அக்போபுரம் பகுதியை சேர்ந்த 64 வயதுடைய வயோதிபர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment