முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குற்றப் புலனாய்வுப் திணைக்களத்துக்கு நாளை செவ்வாய்க்கிழமை அழைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளரான சமன் ஏக்கநாயக்க குற்றப் புலனாய்வுப் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளரான சாண்ட்ரா பெரேரா குற்றப் புலனாய்வுப் திணைக்களத்துக்கு இன்று திங்கட்கிழமை அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment