Home தாயகச் செய்திகள் சுருட்டுக்கு பற்றவைத்த தீ யாழில் 95 வயது முதியவரை பலியெடுத்தது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

சுருட்டுக்கு பற்றவைத்த தீ யாழில் 95 வயது முதியவரை பலியெடுத்தது!

Share
Share

தவறுதலாக உடையில் தீ பற்றியதால் முதியவர் ஒருவர் நேற்றுமுன்தினம்
உயிரிழந்தார்.

பட்டினசபை வீதி, மானிப்பாய் பகுதியை சேர்ந்த மா. சின்னமணி (வயது95) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த முதியவர் கடந்த 26ஆம் திகதி அன்று சுருட்டு புகைப்பதற்கு பற்றவைத்த தீக்குச்சியை தவறுதலாக அவர் அணிந்திருந்த ஆடையில் போட்டுள்ளார். இதில் தீக்காயங்களுக்கு உள்ளான அவர் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுனதினம் உயிரிழந்தார்.

அவரது இறப்பு தொடர்பான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சோமரத்னவுக்கு சிறைக்குள்ளே விசேட பாதுகாப்பு உடன் வழங்கப்பட வேண்டும் என்றும் மனோ வலியுறுத்து!

“செம்மணி படுகொலை வழக்கில் சர்வதேச கண்காணிப்பு, விசாரணைக்கு ஜனாதிபதி அநுர உடன்பட வேண்டும். அதிலே, லான்ஸ்...

மனிதப் புதைகுழிகள்: சர்வதேச விசாரணை நடந்தால் சாட்சியமளிப்பதற்கு நான் தயார் – சோமரத்ன ராஜபக்ஷ!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருக்கின்றேன் என்று...

முதலமைச்சருக்கு போட்டியிட விரும்புகிறேன் என்கிறார் சுமந்திரன்!

வடக்கு மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விரும்புகிறேன் என்று இலங்கை தமிழ் அரசு...

கூரிய வாள்கள், ஐஸ் போதைப்பொருள்களுடன் வீட்டில் தங்கியிருந்த 19 பேர் மூதூர் பொலிஸாரால் கைது!

சந்தேகத்துக்கிடமான முறையில் வீடொன்றில் தங்கியிருந்த 19 பேர் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து...