Home தென்னிலங்கைச் செய்திகள் இந்த வருடம் இதுவரை 73 துப்பாக்கிச்சூடுகள் – 38 பேர் சாவு; 43 பேர் காயம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இந்த வருடம் இதுவரை 73 துப்பாக்கிச்சூடுகள் – 38 பேர் சாவு; 43 பேர் காயம்!

Share
Share

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் இலங்கையில் 73 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களின் போது 38 பேர் உயிரிழந்துள்ளதுடன் 43 பேர் காயமடைந்துள்ளனர்.

அதிகளவான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளன.

இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 24 துப்பாக்கிதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

இதேவேளை, இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களுக்கு உதவி செய்த குற்றத்துக்காக 150 பேரும், மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திய குற்றத்துக்காக 15 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பாலூட்டும் போத்தல் அடையாளம் கண்ட பகுதியில்குழந்தையின் எலும்புத் தொகுதி ஒன்று அகழ்ந்தெடுப்பு!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியிள் இருந்து குழந்தைகளுக்குப் பாலூட்டும் போத்தல் அடையாளம் காணப்பட்ட பகுதியில் குழந்தையின்...

தேசபந்து பதவி நீக்கம்: ஓகஸ்ட் 5 வாக்கெடுப்பு – நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அந்தப் பதவியில் இருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதம்...

நல்லூர் கந்தனுக்குச் செவ்வாய் கொடியேற்றம் – ஏற்பாடுகள் மும்முரம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குக்...

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நபர் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் நிலைய விசாரணைக் கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்...