Home தென்னிலங்கைச் செய்திகள் உங்கள் தந்தை எத்தனை பேரை வேட்டையாடினார்? வாய் கொடுத்து வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டாம் – நாமல் எம்.பிக்கு பிரதி அமைச்சர் ஜயசிங்ஹ பதில்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

உங்கள் தந்தை எத்தனை பேரை வேட்டையாடினார்? வாய் கொடுத்து வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டாம் – நாமல் எம்.பிக்கு பிரதி அமைச்சர் ஜயசிங்ஹ பதில்!

Share
Share

“உங்கள் தந்தை எத்தனை பேரை வேட்டையாடினார்? உங்களை எதிர்ப்பவர்களை இருக்கவிட்டீர்களா? ஆகவே, எம்மிடம் வாய் கொடுத்து வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டாம்.” – இவ்வாறு தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ, நாமல் ராஜபக்ஷ எம்.பியை எச்சரித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலையாட்களின் வரவு – செலவுத் திட்ட நிவாரணப்படி திருத்தச் சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதனத் திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தில் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ உரையாற்றிக்கொண்டிருந்தபோது இராதாகிருஷ்ணன் எம்.பி ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பினார். ஆனால், அதனைப்  பெரிதாகச் செவிமடுக்காத தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ, “எதிராளிகளாக இருந்த சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ஷ, தயாசிறி ஜயசேகர நீங்கள் எல்லோரும் கொழும்பு மாநகர சபை ஆட்சியைக் கைப்பற்ற ஒன்றிணைந்தீர்கள். ஊடக சந்திப்புகளை நடத்தினீர்கள். எதிர்கால நண்பர்களானீர்கள்.” – என்றார்.

இதன்போது குறுக்கிட்ட நாமல் ராஜபக்ஷ எம்.பி., “ஏன் நீங்களும் எமது நண்பர்தானே.” – என்றார்.

இதனால் கோபமடைந்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ, “நீங்கள் நல்லவர்களா? தாஜுதீனைக் கொலை செய்தீர்கள். படுகொலையாளிகளை, வெள்ளை வான் கடத்தல்காரர்களைப்  பாதுகாத்தீர்கள். உங்கள் தந்தை எத்தனை பேரை வேட்டையாடினார். சரத் பொன்சேகாவை என்ன செய்தீர்கள்? உங்களை எதிர்ப்பவர்களை இருக்கவிட்டீர்களா? ஆகவே, எம்மிடம் வாய் கொடுத்து வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டாம்.” – என்று பதிலடி வழங்கினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...