Home தாயகச் செய்திகள் குரங்கு கடித்து மட்டக்களப்பில் பெண்கள் ஆறு பேருக்கு காயம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

குரங்கு கடித்து மட்டக்களப்பில் பெண்கள் ஆறு பேருக்கு காயம்!

Share
Share

மட்டக்களப்பு, வந்தாறுமூலை பிரதேச குடிமனைப் பகுதிக்குள் உள்நுழைந்த குரங்குக் கூட்டம்  பெண்கள் மீது கடித்ததில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

குரங்குகளின் அட்டகாசத்தால் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளின் கூரைகள் சேதமாகியுள்ளன. பயன்தரும் மரங்களும், பயிர்களும் அழிவடைந்துள்ளன.

மக்களும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது பயப் பீதியில் இருக்கின்றார்கள்.

வந்தாறுமூலை, பேக்வீதியில் நேற்று வீட்டைவிட்டு வெளியில் வந்த வயதான பெண் ஒருவர் மீது குரங்கு கடித்ததையடுத்து அவர் படுகாயமடைந்துள்ளார். அவரின் காலில் பாரிய தசைப் பகுதி இல்லாமல் போயுள்ள நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு கடந்த ஒரு வாரத்தில் 6 பேர் குரங்குகடிக்கு உள்ளாகிக் காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பெண்களாவர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ரணில் ஆட்சிக் கால அவசரகால தடைச் சட்டங்கள் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில் விதிக்கப்பட்ட அவசரகால தடைச்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழில் இன்று கறுப்பு ஜூலை நினைவேந்தல்!

இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கறுப்பு ஜூலை 1983 படுகொலையின் 42...

பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீடிப்பு!

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர்...

பால் போத்தலுடன் எட்டு எலும்புக் கூடுகள் இன்று மீட்பு! அவற்றில் பல சிறார்களுடையவை!

யாழ். செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் இருந்து இன்று...