Home தாயகச் செய்திகள் செம்மணியில் இன்று 07 எலும்புக்கூடுகள் அடையாளம்! இதுவரை 72 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

செம்மணியில் இன்று 07 எலும்புக்கூடுகள் அடையாளம்! இதுவரை 72 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

Share
Share

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து இன்று திங்கட்கிழமை 7 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதற்கமைய செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து இதுவரை மொத்தமாக 72 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்ட மனிதப் புதைகுழிகளில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இரண்டாம் கட்டப் பணிகளுக்காக 45 நாள்கள் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் 15 நாள்கள் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கடந்த 10 ஆம் திகதியுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு 11 நாள்களின் பின்னர் இன்று 16 ஆவது நாளாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது இரண்டு மனிதப் புதைகுழிகளில் இருந்தும் 7 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை நாளை செவ்வாய்க்கிழமை அகழ்ந்து எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் இதுவரை யாழ்ப்பாணம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய, இந்த விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் ஒப்படைக்கபட்டுள்ள நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அகழ்வு இடம்பெறும் இடத்தில் பிரச்சன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இளையோர் சுகநலக் கண்காட்சியும் விழிப்புணர்வு நடைபவனி நிகழ்வும்!

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை, யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள், தாய்மார் கழகங்கள்...

ஓகஸ்ட் 10 ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஓகஸ்ட் 10...

வீட்டாரை மிரட்ட முயன்று நயினாதீவில் ஒருவர் பரிதாப மரணம்!

மதுபோதையில் வீட்டாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டு, தனது உடலில் பெற்றோலைஊற்றி தீ வைக்க போவதாக மிரட்டியபோது அந்நபரின்...

அடுத்த வருடம் மாகாணசபைத் தேர்தல்!

மாகாண சபைகளுக்கான தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குஉத்தேசிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தரப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 3...