Home தாயகச் செய்திகள் யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த இளைஞர் சாவு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த இளைஞர் சாவு!

Share
Share

யாழ்ப்பாணத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் – சிவலிங்கப் புளியடியைச் சேர்ந்த 26 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மேற்படி இளைஞர் கடந்த 5 வருடங்களாக ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மயக்கமடைந்த நிலையில் வீட்டில் காணப்பட்டுள்ளார்.

அதனையடுத்து, நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இளையோர் சுகநலக் கண்காட்சியும் விழிப்புணர்வு நடைபவனி நிகழ்வும்!

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை, யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள், தாய்மார் கழகங்கள்...

வீட்டாரை மிரட்ட முயன்று நயினாதீவில் ஒருவர் பரிதாப மரணம்!

மதுபோதையில் வீட்டாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டு, தனது உடலில் பெற்றோலைஊற்றி தீ வைக்க போவதாக மிரட்டியபோது அந்நபரின்...

அடுத்த வருடம் மாகாணசபைத் தேர்தல்!

மாகாண சபைகளுக்கான தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குஉத்தேசிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தரப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 3...

செம்மணியில் இன்று 07 எலும்புக்கூடுகள் அடையாளம்! இதுவரை 72 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து இன்று திங்கட்கிழமை 7 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன....