Home தாயகச் செய்திகள் கிழக்கின் பாதுகாப்பு நிலவரம் பற்றி ஆளுருடன் இராணுவத் தளபதி பேச்சு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

கிழக்கின் பாதுகாப்பு நிலவரம் பற்றி ஆளுருடன் இராணுவத் தளபதி பேச்சு!

Share
Share

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பு திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் பாதுகாப்பு விடயங்களில் இராணுவத்தின் ஈடுபாடு மற்றும் பொதுமக்களுடனான அதன் ஒத்துழைப்பு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.

கிழக்கு இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜனக பல்லேகும்புர மற்றும் 22 ஆவது காலாட்படை பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் லலித் பெரேரா ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வட்டுக்கோட்டை வன்முறை; நடந்தது என்ன? (படங்கள்)

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூளாய் பகுதியில் நேற்று இரண்டு குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்துப்...

நாளை கூடும் நாடாளுமன்றம் – வெள்ளி வரை அமர்வுகள்!

நாடாளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை கூடவுள்ளது. நாடளுமன்றம் கூடும் ஒவ்வொரு நாளும்...

செம்மணி மனிதப் புதைகுழியில் மீண்டும் இன்று முதல் அகழ்வு!

இடைநிறுத்தப்பட்ட யாழ். செம்மணி  மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட  அகழ்வுப்ப ணிகள் இன்று மீள ஆரம்பமாகவுள்ளன....

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு அடியோடு முடிவு கட்ட வேண்டும் – சிறீதரன் வலியுறுத்து!

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டமானது கடந்த 46 ஆண்டுகளாக தமிழர்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ள...