Home தென்னிலங்கைச் செய்திகள் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம்: பொலிஸ் சேவையிலிருந்து நிலந்த ஜெயவர்தன நீக்கம்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம்: பொலிஸ் சேவையிலிருந்து நிலந்த ஜெயவர்தன நீக்கம்!

Share
Share

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்களை அறிந்திருந்தும் அவற்றை மறைத்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட  முன்னாள்  அரச புலனாய்வுத்  துறையின் தலைவர் நிலந்த ஜெயவர்தன பொலிஸ் சேவையில்  இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தீர்மானத்தை பொலிஸ் ஆணைக்குழு எடுத்துள்ளது.

நிலந்த ஜெயவர்தனவைப் பணி நீக்கம் செய்வதற்கான உத்தரவைப்   பிறப்பிக்கும் பணிப்புரையைப் பொலிஸ் ஆணைக்குழு, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பியுள்ளது.

நிலந்த ஜெயவர்தன தனது கடமையைப் புறக்கணித்தார் எனவும், குற்றவியல் குற்றத்தைச் செய்தார் எனவும் உயிர்த்த ஞாயிறு தினக்  குண்டு வெடிப்புகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைத்திருந்தது.

அதன்படி, நிலந்த ஜெயவர்தன மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு, அவர் செய்த குற்றச் செயலுக்காக வழக்குத் தொடரப்பட வேண்டும் என்று பொலிஸ் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பிள்ளையான் தொடர்பான விடயங்கள் நீதிமன்றுக்கு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தொடர்பான சில விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என...

கடற்பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடற்பிராந்தியங்கள், எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குக் கொந்தளிப்பாகக் காணப்படும்...

சம்பூரிலும் மனித எலும்புக் கூட்டு எச்சங்கள்?

திருகோணமலை, சம்பூர் கடற்கரை ஓரமாக நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மனித...

மனைவியை வாளால் வெட்டிபடுகொலை செய்த கணவன்!

குடும்பப் பெண் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மொனராகலை மாவட்டம், பிபிலை...