Home தென்னிலங்கைச் செய்திகள் இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அதிக வலு மோட்டார் சைக்கிள்கள் சிக்கின!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அதிக வலு மோட்டார் சைக்கிள்கள் சிக்கின!

Share
Share

புத்தளம், தலவில மற்றும் நாவக்காடு பகுதிகளில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து  நடத்திய சோதனையின்போது இந்தியாவில் இருந்து கடல் வழியாகக் கடத்தி வரப்பட்டன எனக் கூறப்படும் 5  உயர்வலு கொண்ட மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று  பொலிஸார் தெரிவித்தனர்.

தடை செய்யப்பட்ட 800 மற்றும் 400 எஞ்சின் திறன் கொண்ட நான்கு மோட்டார் சைக்கிள்களும், எந்தவொரு சட்ட ஆவணங்களும் இல்லாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்த 250 எஞ்சின் திறன் கொண்ட ஒரு மோட்டார் சைக்கிளும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது 50, 45 மற்றும் 20, 22 வயதுடைய 4 சந்தேகநபர்களும்  கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோட்டார் சைக்கிள்கள் வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்றும், அவற்றில் சில மோட்டார் சைக்கிள்கள் இரவில் இரகசியமாக ஓட்டிச் செல்லப்பட்டன என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் புத்தளம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பிள்ளையான் தொடர்பான விடயங்கள் நீதிமன்றுக்கு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தொடர்பான சில விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என...

கடற்பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடற்பிராந்தியங்கள், எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குக் கொந்தளிப்பாகக் காணப்படும்...

மனைவியை வாளால் வெட்டிபடுகொலை செய்த கணவன்!

குடும்பப் பெண் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மொனராகலை மாவட்டம், பிபிலை...

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம்: பொலிஸ் சேவையிலிருந்து நிலந்த ஜெயவர்தன நீக்கம்!

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்களை அறிந்திருந்தும் அவற்றை மறைத்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட  முன்னாள்  அரச...