“எனது தந்தை நிச்சயம் வருவார். வரலாறு அவரை விடுதலை செய்யும்.”
– இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்ன தெரிவித்தார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் பிணை மனு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் நேற்று நிராகரிக்கப்பட்டது.
அதன்பின்னர் நீதிமன்ற வளாகத்தில் கருத்து வெளியிடுகையிலேயே ராஜிதவின் மகன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Leave a comment