Home தாயகச் செய்திகள் இளம் யுவதி வெட்டிக்கொலை – தென்னிலங்கையில் கொடூரம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

இளம் யுவதி வெட்டிக்கொலை – தென்னிலங்கையில் கொடூரம்!

Share
Share

இளம் யுவதி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவம் அம்பாந்தோட்டை, கட்டுவனை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

காணித் தகராற்றில் உறவினர்களுக்கிடையிலான வாள்வெட்டு மோதலில் சிக்கியே மேற்படி யுவதி உயிரிழந்துள்ளார்.

தனியார் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் 22 வயது யுவதியே உயிரிழந்துள்ளார்.  

சம்பவத்தில் படுகாயமடைந்த இளம் யுவதியும், அவரின் தந்தையும், சகோதரரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி யுவதி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், மேற்படி சம்பவம் குறித்து உயிரிழந்த யுவதியின் உறவினர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சிலர் விரைவில் சிறைக்குள்! – அமைச்சர் நளிந்த தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தினத் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம் என்று அமைச்சர் நளிந்த...

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்யவும்” – யாழில் கையெழுத்துப் போராட்டம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாது செய்யக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாளக் கையெழுத்துப்...

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களில் ராஜீவ் பங்கு; றீகனுக்கு கடிதம் அனுப்பினார்!?

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பங்கு குறித்து பாரதீய...

பாடசாலை இடை விலகலில் வடக்கில் ஆண்களே அதிகம் – ஆளுநர் கவலை!

வடக்கு மாகாண பாடசாலைகளில் இடை விலகலில் ஆண்களே அதிகமாகவுள்ளனர்என்று ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். தேசிய...