Home தாயகச் செய்திகள் வடக்கின் புதிய அதிகாரிகள் ஆளுநர் முன்னிலையில் பதவி ஏற்பு! (படங்கள்)
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வடக்கின் புதிய அதிகாரிகள் ஆளுநர் முன்னிலையில் பதவி ஏற்பு! (படங்கள்)

Share
Share

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் வடக்கு மாகாணத்தின் 5 செயலாளர்கள், மாநகர சபை ஆணையாளர் மற்றும் பதில் ஆணையாளர் ஆகியோருக்கான நியமனங்கள் ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று புதன்கிழமை நண்பகல் வழங்கி வைக்கப்பட்டன.

பருத்தித்துறை பிரதேச செயலராகக் கடமையாற்றிய எஸ்.சத்தியசீலன் வடக்கு மாகாண சபைக்குப் புதிதாக உள்வாங்கப்பட்டிருந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராகக் கடமையாற்றிய மு.நந்தகோபாலன், மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் பிரதேச செயலராகக் கடமையாற்றிய ச.சிவஸ்ரீ வடக்கு மாகாண சபைக்குப் புதிதாக உள்வாங்கப்பட்டிருந்த நிலையில், வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் பதில் செயலாளராகக் கடமையாற்றிய அ.சோதிநாதன் அதே அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், மாகாண காணி பதில் ஆணையாளராகவும் அவரே நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பதவி வெற்றிடமாக இருந்த நிலையில், வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ஆ.சிறீ நியமிக்கப்பட்டுள்ளார்.

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றிய பொ.வாகீசன், வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசனும் கலந்துகொண்டிருந்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அர்ச்சுனா – தவிசாளர்கள் கடும் வாக்குவாதம்!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கும் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்களர்களுக்கும் இடையில் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்...

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி மட்டு. மாநகரசபைக் கூட்டத்தில் தீர்மானம்!

யாழ்ப்பாணம் – செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரி மட்டக்களப்பு...

யாழ்.மருத்துவபீடம் பேருந்து கொள்வனவுக்காக நடத்தும் இசை நிகழ்சிக்கு 30 சதவீத வரிவிலக்கு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்துக்கான பஸ் கொள்வனவுக்கு நடத்தப்படும் இசை நிகழ்ச்சிக்கு முழுமையான...

தமிழரசின் முடிவுக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க யாழ். நீதிமன்றம் மறுப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தம்மை இடைநிறுத்தி கட்சி எடுத்த முடிவுக்கு எதிராக இடைக்காலத்...