வடக்கில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
யாழ். வலிகாமம் வடக்கின் காணி உரிமையாளர்களுடன் வடக்கு மாகாணத்தில் படையினர் வசம் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் போராட்டத்தை முன்னெடுக்க இன்று கொழும்புக்குப் பயணிக்கின்றனர்.
மன்னாரில் செயற்படும் ஒரு தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்புக்குப் பயணிக்கும் அவர்கள், தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி நாளை கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அதேவேளை, வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Leave a comment