Home தென்னிலங்கைச் செய்திகள் பரீட்சை பெறுபேறுகளை மாத்திரம் வைத்து கல்வியை அளவிடும் முறைமை மிகவும் தவறானது – பிரதமர் ஹரிணி!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பரீட்சை பெறுபேறுகளை மாத்திரம் வைத்து கல்வியை அளவிடும் முறைமை மிகவும் தவறானது – பிரதமர் ஹரிணி!

Share
Share

பரீட்சை பெறுபேறுகளை மாத்திரம் வைத்து கல்வியை அளவிடும் முறைமை மிகவும் தவறானது எனவும், அந்த முறைமை மாற்றப்பட வேண்டுமெனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது, அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். 

அத்துடன், அனைத்து தரப்பினரும் கல்வி குறித்து குறுகிய பார்வையைக் கொண்டிருப்பதாகப் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வி முறைமையினை மாற்றுவதன் மூலம், மாணவர்கள் தங்களது திறமைகளுடன் முன்னேறுவதற்கு உதவும் கல்வி முறைமையினை உருவாக்குவதற்கு உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், படைப்பாற்றல் மற்றும் மனிதாபிமானம் கொண்ட சிறுவர்களை வளர்ப்பதே தங்களது நோக்கமாகும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதன்போது தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரல்!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் பரிசீலனை...

பளையில் இளைஞர் மீது பொலிஸார் தாக்குதல்?

பொலிஸ் புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகம் செய்ததுடன், பொலிஸ் என்று எழுதப்பட்ட மேலங்கியும் அணிந்திருந்த நால்வரால்...

இலங்கையைப் பிரிக்கும் முயற்சி தொடர்கின்றது- இந்தியாவை சாடுகிறார் தம்மரத்ன தேரர்!

இலங்கையைப் பிரிக்கும் இந்தியாவின் முயற்சி இன்றும் மாற்றமின்றி தொடர்கின்றது என்று பேராசிரியர் இந்துராகரே தம்மரத்ன தேரர்...

போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் இல்லை – சிறீதரன் எம்.பி. விசனம்!

“இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர்...