இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டன என நம்பப்படும் 02 இலட்சம் போதை மாத்திரைகள் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தியாவில் இருந்து அதிக போதை மாத்திரைகள் மன்னார் கடல் பகுதியூடாகக் கடத்தி வரப்படுகின்றன என்று விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பேசாலையில் விசேட அதிரடிப் படையினர் நேற்று மேற்கொண்ட தேடுதலின்போதே 2 இலட்சம் போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. மேலதிக நடவடிக்கைக்காக சான்றுப்பொருள்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Leave a comment