வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் 69.86 வீத சித்தியைப் பெற்று இறுதி நிலையைப் பெற்றுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தநிலையில் 2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 2 இலட்சத்து 37 ஆயிரத்து 26 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்தார்.
இது பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45 வீதமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், அனைத்து பாடங்களிலும் 9 ‘ஏ’ சித்திகளை பெற்ற 13 ஆயிரத்து 392 மாணவர்கள் உள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இது மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 4.15 வீதமாகும் என கூறியுள்ளார்.
அதனடிப்படையில் தெற்கு மாகாணத்தில் 75.64 வீதம் மேல் மாகாணத்தில் 74.47 வீதம்
கிழக்கு மாகாணத்தில் 74.26 வீதம் மத்திய மாகாணத்தில் 73.91 வீதம் சப்ரகமுவ மாகாணத்தில் 73.47 வீதம் ஊவா மாகாணத்தில் 73.14 வீதம் வடமேல் மாகாணத்தில் 71.47 வீதம் வட மத்திய மாகாணத்தில் 70.24 வீதம் வடக்கு மாகாணத்தில் 69.86 வீத மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.
பாட வாரியாக பௌத்தம் 83.21 வீதம், சைவநெறி – 82.96 வீதம், கத்தோலிக்கம் 90.22 வீதம், கிறிஸ்தவம் 91.49 வீதம், இஸ்லாம் 85.45 வீதம், ஆங்கிலம் 73.82 வீதம், சிங்கள மொழி மற்றும் இலக்கியம் 87.73 வீதம், தமிழ் மொழி மற்றும் இலக்கியம் 87.03 வீதம்
வரலாறு 82.17 வீதம், அறிவியல் 71.06 வீதம், கணிதம் 69.07 வீதம் சித்தியடைந்துள்ளனர் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாத மாணவர்களின் சதவீதம் 2.34 வீதம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment