Home தென்னிலங்கைச் செய்திகள் இலங்கையில் டிஜிட்டல் சேவைகளுக்கும் வரி!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இலங்கையில் டிஜிட்டல் சேவைகளுக்கும் வரி!

Share
Share

இலங்கையில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் பெறுமதி சேர் வரி விதிக்கப்படவுள்ளது. 

2025 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க பெறுமதிசேர் வரி திருத்தச் சட்டத்தின்படி, டிஜிட்டல் சேவைகளுக்கு இந்த வரி விதிக்கப்படவுள்ளதாக, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இலங்கையிலுள்ள நபரொருவருக்கு மின்னணு தளம் மூலம் சேவைகளை வழங்கும் வெளிநாட்டினர், இந்த டிஜிட்டல் சேவைகளுக்கு வரி செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய டிஜிட்டல் சேவைகளுக்கான வரி தொடர்பான வழிகாட்டல்கள், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, கடந்த 12 மாதங்களில் 60 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சேவைகளை வழங்கியவர்கள், அல்லது கடந்த காலாண்டில் 15 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சேவைகளை வழங்கியவர்கள் இந்த பெறுமதிசேர் வரிக்காக பதிவு செய்வது கட்டாயமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தமிழை எதிரணி கொச்சைப்படுத்துகிறது – அமைச்சர் சந்திரசேகர் கவலை!

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...

பொலிஸ் விசேட குழுவினரின் அறிக்கைக்கு அமைய செம்மணி புதைகுழி தொடர்பில் நடவடிக்கை – அரசாங்கம்!

யாழ் செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் பொலிஸ் விசேட குழுவினர் தமது விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்துக்கு...

செம்மணி விவகாரம்; பிரித்தானியா ஆழ்ந்த கவலை!

செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் பிரித்தானியா, இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாக, பிரித்தானிய வெளிவிவகார...

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பிள்ளையானுக்கு முழுமையாகத் தெரியும் – அரசாங்கம் அறிவிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முழுமையாக அறிந்திருந்தமை தற்போதைய...