Home தென்னிலங்கைச் செய்திகள் அதிகரித்த வாகன இறக்குமதி தொடர்பில் எச்சரிக்கை!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

அதிகரித்த வாகன இறக்குமதி தொடர்பில் எச்சரிக்கை!

Share
Share

எதிர்பார்த்ததை விட அதிகளவான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையால் ஏற்படப்போகும் பாதக நிலை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஐந்து மாதங்களில் 18 ஆயிரம் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதன் வரி வருமானமாக 22 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகச் சுங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனியார் வாகன இறக்குமதிக்கான தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களில் 742 டொலர் மில்லியன் கடன் பத்திரங்கள் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்காக வாகன இறக்குமதிக்காக 1000 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு தனியார் வாகன இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டது. அதன் பிரகாரம் 22 மாதங்கள் எந்தவித வாகனங்களும் இறக்குமதி செய்யப்படவில்லை.

பெப்ரவரி 01ஆம் திகதி முதல் தனியார் பாவனைக்கான வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. ஆண்டில் 5 அல்லது 6 மாதங்களுக்குள்ளாக மத்திய வங்கி சுமார் 800 மில்லியன் டொலரை வைப்புக்காக பெற்றுக் கொண்டுள்ளது.

அதில் சாதாரண மக்களுக்காக பயன்படுத்தும் தொகையிலே குறைவு ஏற்படப்போகிறது.

எனினும், அரசாங்கம் வாகனத்தின் தொகை எவ்வாறு இருந்தாலும் 1000 மில்லியன் டொலர் வாகன இறக்குமதிக்காக ஒதுக்கியுள்ளது என்று பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தமிழை எதிரணி கொச்சைப்படுத்துகிறது – அமைச்சர் சந்திரசேகர் கவலை!

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...

பொலிஸ் விசேட குழுவினரின் அறிக்கைக்கு அமைய செம்மணி புதைகுழி தொடர்பில் நடவடிக்கை – அரசாங்கம்!

யாழ் செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் பொலிஸ் விசேட குழுவினர் தமது விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்துக்கு...

செம்மணி விவகாரம்; பிரித்தானியா ஆழ்ந்த கவலை!

செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் பிரித்தானியா, இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாக, பிரித்தானிய வெளிவிவகார...

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பிள்ளையானுக்கு முழுமையாகத் தெரியும் – அரசாங்கம் அறிவிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முழுமையாக அறிந்திருந்தமை தற்போதைய...