யாழ்ப்பாணத்தில் 40 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்தே மேற்படி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த இளைஞரிடம் இருந்து 40 போதை மாத்திரைகளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
Leave a comment