Home தென்னிலங்கைச் செய்திகள் 40 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பிரஜை கைது!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

40 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பிரஜை கைது!

Share
Share

40 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று வெள்ளிக்கிழமை (25) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கனடா நாட்டைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரான வெளிநாட்டுப் பிரஜை கனடாவிலிருந்து இருந்து கத்தாரின் தோஹா நகரத்திற்கு சென்று பின்னர் அங்கிருந்து இன்றைய தினம் அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

பின்னர் சந்தேக நபரான வெளிநாட்டுப் பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தின் (Green Channel) வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரான வெளிநாட்டுப் பிரஜை கொண்டு வந்த பயணப்பொதிகளில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 கிலோ 196 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும் 05 கிலோ 298 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கஜேந்திரகுமார் நினைப்பது போல் தமிழரசுக் கட்சி செயற்படாது! – சி.வி.கே.!

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் முடிந்து விடும் வேலையைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்...

புதிய அரசமைப்புக்கான வேலைத்திட்டம் ஆரம்பம் – நாடாளுமன்றில் பிரதமர் தெரிவிப்பு !

“புதிய அரசமைப்புக்கான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எமது ஆட்சிக் காலத்துக்குள் புதிய அரசமைப்பு திருத்தங்களை மேற்கொள்வோம்.”...

நெடுந்தீவுக் கடலில் கைதான இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் ஓகஸ்ட் 06 வரை மறியல் நீடிப்பு!

யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும்...

மேலதிக அரச அதிபர்கள் இருவர் மன்னார் மாவட்டத்துக்கு நியமனம்!

மன்னார் மாவட்டத்துக்கு நிர்வாகம் மற்றும் காணி விவகாரங்களுக்குப் பொறுப்பாக மேலதிக அரச அதிபர்கள் நேற்று பொது...