பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இன்று வியாழக்கிழமை (14) காலை பொலிஸ் தலைமையகத்தில் வைத்து தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நாட்டின் 37 ஆவது பொலிஸ் மாஅதிபராவார்.
பதில் பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மாஅதிபராக நியமிக்க ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை நேற்று புதன்கிழமை (13) அங்கீகாரமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a comment