Home தென்னிலங்கைச் செய்திகள் 2029 இல் ‘மொட்டு’ ஆட்சி – இப்படி நம்புகின்றார் சஞ்சீவ!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

2029 இல் ‘மொட்டு’ ஆட்சி – இப்படி நம்புகின்றார் சஞ்சீவ!

Share
Share

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் வெகுவிரைவில் மீண்டும் கட்சியில் ஒன்றிணைவார்கள். கட்சியின் பிரதான பதவிகள் மறுசீரமைக்கப்படும். 2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் நாங்களே ஆட்சியைக் கைப்பற்றுவோம்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் காலத்தின் போது பல்வேறு காரணிகளால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் சென்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சியில் மீண்டும் ஒன்றிணைவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கட்சியில் இருந்து விலகிச் சென்ற முன்னிலை சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும், கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் நடைபெற்றது. இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் வெகுவிரைவில் மீண்டும் கட்சியில் ஒன்றிணைவார்கள். கட்சியின் பிரதான பதவிகள் மறுசீரமைக்கப்படும்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் இந்த அரசு செயற்படுகின்றது. 2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே ஆட்சி அதிகாரத்தைக்  கைப்பற்றும். அதற்கான நடவடிக்கைகளைத் தற்போது மேற்கொண்டுள்ளோம்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ஐ.நா. பொதுச்சபையில் ஜனாதிபதி அநுர உரை!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றவுள்ளார் என்று அரச தரப்புத் தகவல்கள்...

கூட்டுப் பொறுப்பைப் பராமரிக்கத் தவறியுள்ளது அமைச்சரவை – தலதா அத்துகோரல தெரிவிப்பு!

சுப்ரீம்செட் திட்டத்தின் முதலீடு குறித்து மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டதன் மூலம் அமைச்சரவை தமது கூட்டுப் பொறுப்பைப் பராமரிக்கத்...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவதை எதிர்த்து மனுத் தாக்கல்!

கடந்த 07 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளின்சிறப்புரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு...

யானை தாக்கி முல்லைத்தீவில் ஒருவர் படுகாயம்!

யானையின் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதனா மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான்...