2029 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அறிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
2029 ஜனாதிபதி தேர்தல் ஊடாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம். நாட்டை பொறுப்பேற்பதற்கு தகுதியான இளம் தலைவராக நாமல் ராஜபக்ஷ திகழ்கின்றார். அவரே எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்.
பொய் கூறி ஆட்சியை பிடித்தாலும், பொய்கூறி ஆட்சியை நடத்த முடியாத நிலை தேசிய மக்கள் சக்திக்கு ஏற்பட்டுள்ளது.
மொட்டு கட்சியின் வாக்குகளே தேசிய மக்கள் சக்திக்கு சென்றது. எனவே, அடுத்த தேர்தலில் எம்மால் வெல்லமுடியும்-என்றார்.
Leave a comment