விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி இன்று செவ்வாய்க்கிழமை காலை உத்தரவிட்டுள்ளார்.
வைத்தியர் மகேஷி விஜேரத்ன கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வைத்தியர் மகேஷி விஜேரத்னவை 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மருந்துகளை மூன்றாம் தரப்பின் ஊடாக அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment