நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை நாளைய தினம் கவனம் செலுத்த வேண்டிய அளவுக்கு உயரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வட, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில பகுதிகளிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் அளவில் வெப்பநிலை காணப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாகாணங்களில் உள்ள மக்கள் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருகுவதுடன், வயதானவர்கள் மற்றும் நோயாளர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வட, வடமத்திய, ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Leave a comment