தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தினார் என்று கூறப்படும் பதுங்கு குழியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வில் தகரங்கள் மட்டுமே கிடைத்தன. இதைத் தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வு இடைநிறுத்தப்பட்டது.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – 8ஆம் வட்டாரம்மந்துவில் கிராமத்தில் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு அருகிலுள்ள காணியை போர் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தியிருந்தனர்.
இந்தக் காணியிலுள்ள நிலக்கீழ் பதுங்கு குழியை தலைவர் பிரபாகரன் மற்றும் தளபதிகள்
பயன்படுத்தியிருந்தனர் என்று கூறப்படுகிறது.
இந்தப் பதுங்கு குழியில் தங்கம் அல்லது ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, பதுங்கு குழியை அகழ்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் சுமார் 20 அடி ஆழமான குழியிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இந்த நடவடிக்கையை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன் பார்வையிட்டிருந்தார்.
அவரின் கட்டளையின் பேரில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணி தொடக்கம் அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டது. பிற்பகல் 4.30 மணி வரை தொடர்ந்த ஆய்வில் தகரங்கள் சில மீட்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அகழ்வு பணியை இடைநிறுத்துவதற்குநீதிபதி உத்தரவிட்டார்.







Leave a comment