Home தாயகச் செய்திகள் வவுனியா வைத்தியசாலைக்குச் சென்ற யுவதி ஒருவரைக் காணவில்லை!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

வவுனியா வைத்தியசாலைக்குச் சென்ற யுவதி ஒருவரைக் காணவில்லை!

Share
Share

வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற இளம் யுவதி ஒருவரை காணவில்லை என நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, தம்பனைபுளியங்குளம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் சர்மிளா (வயது 22) என்ற இளம் யுவதியே காணாமல் போனவராவார்.

தொடர் தலைவலி காரணமாக மருந்து எடுப்பதற்காக பேருந்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வவுனியா வைத்தியசாலைக்கு சென்று வைத்தியசாலையில் மருந்து எடுத்துள்ளார்.

எனினும், குறித்த யுவதி  நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரை வீடு வந்து சேரவில்லை. உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தேடிய பெற்றோர், மகள் தொடர்பில் தகவல்கள் எதுவும் தெரியாத நிலையில்,  நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 

முறைப்பாடு தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பிரச்சினைகளைத் தீர்க்க அரசுக்கு திறமையில்லையேல் நாடே அழியும்! – நேபாளத்தின் நிலையை சுட்டிக்காட்டி ரணில் விசேட அறிக்கை!

“நேபாளத்தில் நீண்ட காலமாகக் காணப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. தெற்காசிய பாரம்பரியத்தின்படி, கடுமையான...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகள்!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்குப் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு...

வழக்குகள் தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மூலம் ஏற்றுக்கொள்ள நடவடிக்கை!

வழக்கு தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மூலம் ஏற்றுக் கொள்ளும் வசதியை உயர் நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது. ...

வலி. வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் வலிந்து தவிர்க்கப்பட்டு வருவது ஏன்? – சபையில் சிறீதரன் எம்.பி. கேள்வி!

“நாட்டில் போர் முடிவடைந்து  16 ஆண்டுகள் கடந்துள்ள பின்னரும், வலிகாமம் வடக்கு பிரதேச மக்களின் மீள்குடியேற்றம்...