வவுனியா மாநகர சபையின் துணை மேயரைப் பதவி விலககே கோரி அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா மாநகர சபையால் நடை பாதை வியாபாரம் முற்றிலும் தடை செய்யப்பட்டு அவர்களுக்கான மாற்றிடங்கள் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில் வவுனியா மொத்த மரக்கறி வியாபார நிலையங்களும் பொருளாதார வர்த்தக மையத்துக்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வவுனியா – ஹொரவப்பொத்தான வீதியில் உள்ள இஸ்லாமிய சமூகம் சார்ந்தவர்களின் சிறு வியாபார நிலையங்களும் நடைபாதையில் இருப்பதால் அவற்றையும் அகற்றுவதற்கு வவுனியா மாநகர சபையின் துணை மேயர் பரமேஸ்வரன் கார்த்தீபன் கடும் முயற்சி எடுத்து வரும் நிலையிலேயே அவரை இராஜிநாமா செய்யுமாறு ஒரு சில அரசியல்வாதிகளால் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது என அறியப்படுகின்றது.
Leave a comment