Home தாயகச் செய்திகள் வவுனியா கூமாங்குளத்தில் பொலிஸாரால் ஒருவர் மரணம்! நீதி கோரிய மேலும் ஐவரை பிடித்தது பொலிஸ்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வவுனியா கூமாங்குளத்தில் பொலிஸாரால் ஒருவர் மரணம்! நீதி கோரிய மேலும் ஐவரை பிடித்தது பொலிஸ்!

Share
Share

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் மேலும்
5 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, கூமாங்குளம் பகுதியில் மோட்டர்
சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் வீதியில் விழுந்து மரணமடைந்திருந்தார்.

இதன்போது அப் பகுதியில் பயணித்த போக்குவரத்து பொலிஸாரே
குறித்த மரணத்துக்கு காரணம் என தெரிவித்த ஒரு குழுவினர் குழப்பத்தில் ஈடுபட்டதுடன்,
பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர்.

மரணம் தொடர்பில் விசாரணை செய்ய சென்ற பொலிஸார் மீது அப் பகுதியில் குழுமி
இருந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 5 பொலிஸார் காயமடைந்ததுடன், பொலிஸாரின் இரு மோட்டர் சைக்கிள்கள் மற்றும் கப் ரக வாகனம் ஒன்றும் சேதமாக்கப்பட்டது.

இச் சம்பவத்தில் அரச சொத்துக்களைச் சேதப்படுத்தியமை, மக்களை ஒன்று கூட்டியமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறை ஏற்படுத்தியமை, இறப்புக்கு காரணமாக இருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் இருவர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து மேலும் 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் – அரசாங்கம்!

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு...

மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளர்களுக்கு பெரும் சிரமம்!

கொடுப்பனவுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8...

தேசிய மருத்துவமனையாகிறது யாழ்.போதனா!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய...