Home தாயகச் செய்திகள் வவுனியாவில் போக்குவரத்துப் பொலிஸார் துரத்தியதால் நபர் ஒருவர் மரணம்! மக்கள் திரண்டதால் பதற்றம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வவுனியாவில் போக்குவரத்துப் பொலிஸார் துரத்தியதால் நபர் ஒருவர் மரணம்! மக்கள் திரண்டதால் பதற்றம்!

Share
Share

வவுனியா மாவட்டம் கூமாங்குளம் பகுதியில் கடந்த இரவு போக்குவரத்து பொலிசார் துரத்திச்சென்று மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் தடி ஒன்றைச் செலுத்தியமையால் விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனால் கொதிப்படைந்த ஊர்மக்கள் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அந்தப்பகுதியில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த இரவு 10 மணியளவில் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பொலிசார் வந்துள்ளனர்.

இதன்போது அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த நபர் ஒருவரை துரத்திச்சென்றதுடன் அவரது வாகன சக்கரத்தினுள் தடி ஒன்றைச் செலுத்தி தடையினை ஏற்ப்படுத்தியதாககவும் இதனால் நிலை தடுமாறி கீழே வீழ்ந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் என்றும் அங்கு கூடிய மக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தை அவதானித்த மக்கள் ஆத்திரமடைந்து பொலிசாரின் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தினர்.இதனால் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டது.

உயிரிழந்தவரின் சடலத்தை அகற்றுவதற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர்கள் நீதிபதி இங்கு வரவேண்டும் வந்த பின்னரே சடலத்தை அகற்ற அனுமதிப்போம் என தெரிவித்தனர்.

இந்த நிலையில் வவுனியா சிரேஸ்டபொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திற்கு வருகைதந்ததுடன், இந்த மரணத்தை கொலை வழக்காக பதிவுசெய்து அதனுடன் தொடர்புடையை சந்தேகநபர்களை விசாரிப்பதாக தெரிவித்ததுடன், சடலத்தை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவித்திருந்தார்.

அதற்கும் மறுப்புத் தெரிவித்த பொதுமக்கள் பொலிசார் மீது நம்பிக்கை இல்லை நீதிபதி இங்கு வரவேண்டும் என விடாப்பிடியாக நின்றனர்.

இதனால் குறித்த பகுதியில் கலவரம் ஒன்று ஏற்படுவதற்கான நிலைமை ஏற்ப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்குச் சென்று மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார்.

பின்னர் மக்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் சடலம் அந்த பகுதியில் இருந்து அகற்றப்பட்டு பொலிசாரின் வாகனத்தில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

உயிரிழந்தவர் கூமாங்குளம் பகுதியை சேர்ந்த இராமசாமி அந்தோனிப்பிள்ளை (வயது 58) என்று தெரிவிக்கப்படுகின்றது.

அவரது சடலத்திற்கு அருகில் பொலிசார் ஒருவரின் பெயர்ச் சின்னம் ஒன்றும் பொலிஸ் உத்தியோகத்தரின் அடையாளச் சின்னம் ஒன்றும் காணப்படுகின்றது.

குறித்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெருமளவான பொலிசார் குவிக்கப்பட்டதுடன் விசேட அதிரடிப்படையினர், கலகதடுப்பு பொலிசாரும் களம் இறக்கப்பட்டிருந்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை உட்பட்ட நாடுகளிலிருந்து ஆடை இறக்குமதி வரி விலக்கு – பிரித்தானியா!

இலங்கை உட்பட வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து ஆடை உள்ளிட்ட பொருட்களை வரியின்றி இறக்குமதி செய்வதற்குப் பிரித்தானிய...

பரீட்சைப் பெறுபேறுகளில் இறுதி இடத்தைப் பெற்றது வடக்கு!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் 69.86...

நவம்பரில் உயர் தரப்பரீட்சை!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல்...